பதிவு செய்த நாள்
04
ஏப்
2023
04:04
கோத்தகிரி: கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் பூ குண்ட திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த, 31ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. முக்கிய திருவிழா நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு, பூ குண்டம் நடந்தது. இதில், விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, (5ம் தேதி) மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 6ம் தேதி குதிரை வாகனத்திலும், 7ம் தேதி, சிம்ம வாகனத்திலும், 8ம் தேதி புலி வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா நக்கிறது. வரும், 9ம் தேதி அம்மனை ஆற்றங்கறியில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. இறுதி நாளான, 10ம் தேதி மஞ்சள் நீராட்டு மற்றும் மறு பூஜையுடன், விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் மகளிர் வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.