எரியோடு பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2023 04:04
எரியோடு: எரியோட்டில் பாலசுப்பிரமணிசுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம், மாப்பிள்ளை அழைப்புடன் துவங்கியது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 9 நாட்கள் நடக்கும். நேற்று கொடியேற்றம், முருகன் மாப்பிள்ளை சுவாமி அழைப்புடன் துவங்கியது. தொடர்ந்து எட்டு நாள் இரவும் சுவாமி புறப்பாடு நடந்து வெவ்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளுவார். இன்று மட்டும் திருக்கல்யாணம் வைபவத்தை தொடர்ந்து எரியோடு நகரில் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி காட்சி தருவார். ஏப்.12ல் சுவாமி தெப்பத்தில் இருந்து எழுந்தருளி மீண்டும் அனைத்து மண்டகபடி, திருக்கண்களுக்கு சென்று மஞ்சள் நீராடி கோயில் திரும்புதலுடன் திருவிழா நிறைவடைகிறது.