பதிவு செய்த நாள்
06
ஏப்
2023
06:04
அவிநாசி: அவிநாசி வட்டம்,வேலாயுதம்பாளையம் கிராமம், பெரிய கருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் இரண்டாம் ஆண்டு, பூச்சாட்டு விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் வந்தனர்.
அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய கருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில், பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட,குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல், பூவோடு எடுத்தல்,பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,கம்பம் பிடுங்கி கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் பூவோடு எடுத்தல், அபிஷேக ஆராதனை, கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. பூச்சாட்டு விழாவில்,முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. பூச்சாட்டு விழாவில், இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகின்றது. பூச்சாட்டு விழாவையொட்டி,ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.