பாலமேடு: பாலமேடு அருகே கீழச்சின்னணம்பட்டி கருப்புச்சாமி, அய்யனார் சுவாமி முத்தாலம்மன், காளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. முதல் நாள் அம்மனுக்கு பிடிமண் வழங்கப்பட்டு அனைத்து கோயில்களிலும் காப்பு கட்டப்பட்டது. பூஜாரி வீட்டிலிருந்து நகை பெட்டி துரக்கி வந்து சுவாமிகளுக்கு கண்மாயில் கண் திறப்பு அலங்காரமும், விநாயகர் கோயில் அருகே அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில்கள் முன்பாக பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு செய்தனர். அக்னிச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.