திருநள்ளார் கோவிலில் தங்கரதம் தேர்செய்யும் பணி மந்தம் : காட்சி பொருனாக தேர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2023 10:04
காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபகாவன் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கரதம் தேர்பணிகள் பாதியில் நிற்பதால் தங்கதேர் தற்போது காட்சிபெருட்களாக கணப்பட்டு வருகிறது.
காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனிச்சன்னதியில் அருள்பலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். மேலும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற நன்கோடை உதவியுடன் கோவில் நிர்வாகம் சார்பில் 8 கிலோ தங்கம் மூலம் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கரதம் தேர் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக தங்கரதம் தேர் செய்யப்பட்டு செம்புதகவுகளில் தங்கரத தேரில் முன் இரண்டு குதிரைவாகனம் சிறப்பு அம்சங்களுடன் செய்யப்பட்டுள்ளது. தேர் கம்பிரமாக காட்சி அளித்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நன்கோடை மூலம் தங்கரதம் தேர் செய்யும் பணி விருவிருப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளாக தங்கரதம் தேர்செய்யும் பணியில் கோவில் நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளுவதில்லை பக்தர்களுக்காக தயார் செய்யப்பட்ட தங்கரதம் எவ்வித முன்னோற்றம் இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. தங்கதேருக்கான பக்தர்களிடம் பெறப்பட்ட நன்கொடை தொகை மற்றும் தங்கம் குறித்து எவ்வித பதில் இல்லை மேலும் தற்போது பாதியில் உள்ள தங்கதேரில் ஒருசில பொருட்கள் மாயமாகி வருவதாக கூறப்படுகிறது. எனவே பல்வேறு முக்கிய கோவிலில் பக்தர்கள் வேண்டுதலை இணையாக தங்கத்தேர் வெள்ளிதேர் சிறப்பாக செய்யப்பட்டு பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர். ஆனால் பிரசித்தி பெற்ற சனிஸ்வரபகவான் கோவில் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக ஒரு தங்கதேர் இல்லாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.எனவே புதுச்சேரி அரசு சனிபகவான் கோவிலில் தயார் செய்யப்பட்ட தங்கரதம் விரைவில் முடிக்க ஒரு குழுஅமைத்து வரும் டிசம்பர் மாதம் சனிப்பெயர்ச்சி முன்னதாக தங்கதேர் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.