Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருநள்ளார் கோவிலில் தங்கரதம் ... சுகப்பிரம்ம ஆசிரமத்தில் வித்யாப்பிரகாசானந்தகிரி சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் சுகப்பிரம்ம ஆசிரமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி, காணிப்பாக்கம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி, காணிப்பாக்கம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2023
11:04

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள அஞ்சிஅஞ்சி விநாயகர் சாமி சன்னதி அருகில் கணபதி ஹோமப் பூஜைகள் சாஸ்திர பூர்வமாக கோயில் வேத பண்டிதர்கள் நடத்தினர் .இந்த பூஜையில் ஒவ்வொரு குடும்பமும் தனித்தனியாக கணபதி ஹோமப் பூஜைகளில் ஈடுபட இயலாது என்பதால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு தாரக.சீனிவாசுலு தலைமையில் தேவஸ்தானம் சார்பில் சங்கட ஹர சதுர்த்தசி அன்று கணபதி ஹோமம் ஆர்ஜித சேவையாக கொண்டு வந்தனர்.

இதனால் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தசி என்று அஞ்சி அஞ்சி விநாயகர் சாமி சன்னதி அருகில் ஏராளமான பக்தர்கள் தாங்கள் தனித்தனியாக சங்கடஹர சதுர்த்தி ஹோம பூஜைகளை நடத்த இயலாது என்பதால் கணபதி ஹோமத்தை ஆர்ஜித சேவையில் ஈடுபடுவதால் தங்கள் குடும்பத்தினருக்கு கணபதி அனுகிரகம் அருள் கிடைக்கும் என்பதால் இந்த சேவையில் கலந்து கொள்வதாக பக்தர்கள் தெரிவித்தனர் .இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை யொட்டி கோயில் வளாகத்தில் அஞ்சி அஞ்சி கணபதி சந்நதி அருகில் சிறப்பு பூஜைகள் செய்தனர் .கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் தலைமையில் முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி கணபதி ஹோமத்தை சாஸ்திர பூர்வமாக நடத்தினர் .விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடத்தியதோடு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஹாரதிகளை சமர்ப்பித்தனர் .இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசலு மற்றும் கோயில் பிரதான அர்ச்சகர் கருணா குருக்கள், கோயில் கண்காணிப்பாளர் நாகபுஷணம், வேத பண்டிதர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர்  கோயிலிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை  சங்கடஹர சதுர்த்தி என்பதால் கோயில் வளாகத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் சங்கடஹர சதுர்த்தியை யொட்டி காலை முதல் மாலை வரை கணபதி ஹோம பூஜைகள் நடைபெற்றது .இந்த சிறப்பு பூஜையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் கோயில் துணை நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் தேய்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
மதுராந்தகம்; மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சியில், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோவிலில் விசுவாவசு ஆண்டு ஆனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar