பதிவு செய்த நாள்
11
ஏப்
2023
04:04
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மருத மரங்களின் வேர் பகுதியிலிருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் சிறப்பு. உபயதாரர்கள் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் முதல் நாளில் விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, தன பூஜை, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாஹ வாசனம், பூர்ணாஹூதி உட்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. 2ம் நாளில் யாக கேள்வி துவங்கி அஷ்ட பந்தன மருந்து சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. 3ம் நாளில் மங்கள இசை விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, யாகவேள்வி, மஹாபூர்ணாஹூதி, தீபாராதனைக்குப் பின் யாத்திரை தானம் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து விநாயகர், மாவூற்று வேலப்பர் சுவாமி கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, கோயில் செயல் அலுவலர் நதியா, ஆய்வாளர் கார்த்திகேயன், தெப்பம்பட்டி ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், ஆண்டிபட்டி வர்த்தக பிரமுகர்கள் ஸ்ரீதேவி சில்க்ஸ் விஸ்வநாதன், தன முருகன் நகை மாளிகை வெங்கடேச முருக பிரபு, கர்ணா ஹோட்டல் பாலமுருகன், ஜி.எஸ்.வி.மீனாட்சிசுந்தரம், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் செல்வம், எஸ்.கே.ஏ.,கல்வி குழும தலைவர் வஜ்ரவேல், கதிர் நரசிங்கபுரம் ஊராட்சி தலைவர் முருகலட்சுமி, துணைத் தலைவர் சுமித்ரா, ஓசூர் பிரீமியர் சீலிங் ப்ராடக்ட்ஸ் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஹிந்து முன்னணி சார்பில் பக்தர்களுக்கு மோர், குடிநீர் வழங்கப்பட்டது.