தேவகோட்டை: தேவகோட்டை தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 4 ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒன்பது தினங்கள் நடைபெற்றது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெவ்வேறு அம்பாள்களின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும்., அம்மன் கரகம் எடுத்து நகர் வலம் வந்து அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கேற்றி பூஜை செய்தனர். நேற்று இரவு நேர்த்திக்கடன் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். இன்று பகலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். மாலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. ராமலிங்கம், கருப்பு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர்.