அன்னூர்: பொன்னே கவுண்டன் புதூர், பொன் மாரியம்மன் கோவில் பால்குடத் திருவிழா நடந்தது.
பொன்னே கவுண்டன் புதூரில், பழமையான பொன் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இரண்டாம் ஆண்டு பால் குடத் திருவிழா இன்று நடந்தது. இன்று காலை பொன் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. இதையடுத்து பொன் விநாயகர் கோவிலில் 150 பெண்கள் பால் குடங்களை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். அதன் பிறகு ஜமாப் மற்றும் பம்பை இசையுடன் பால் குடங்களுடன் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலம் மதியம் பொன்மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு 150 குடத்தில் இருந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது, இதைத்தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.