சபரிமலையில் விஷூ கனிதரிசனம், கைநீட்டம: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2023 04:04
சபரிமலை, சபரிமலையில் நேற்று காலை நடைபெற்ற சித்திரை விஷூ கனி தரிசனம் மற்றும் கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சித்திரை விஷூ விழாவுக்காக சபரிமலை நடை கடந்த 11–ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறந்தது. அன்று பூஜைகள் இல்லை. 12–ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் காய் , கனிகளால் செய்யப்பட்ட அலங்காரத்தை பக்தர்கள் பார்வையிட்டு தரிசனம் நடத்தினர், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கினர். அதிகாலை முதலே பக்தர்களின் நீண்ட கியூ காணப்பட்டது. வரும் 19–ம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.