Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் விஷூ கனிதரிசனம், ... நல்லாண் பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி விநாயகர் கோவிலில் லட்சதீபம் நல்லாண் பிள்ளை பெற்றாள் சுயம்பு ஆதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் தெப்பத்திருவிழா

பதிவு செய்த நாள்

16 ஏப்
2023
04:04

 கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.இக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடந்தன. 9ம் திருநாளான 13ம் தேதி தேர் திருவிழாவும், 10ம் திருநாளான 14ம் தேதி தீர்த்தவாரி தீபாராதனையும் நடந்தது.11ம் திருநாளான இன்று தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. பின்னர், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது. இரவில் ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு, மெயின் ரோட்டில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கோயில் தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar