காளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2023 05:04
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடைவிதித்த தேவஸ்தானத்திற்கு அரசியல்வாதிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை
ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்ல தடைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான தலைவர் அஞ்சுரு.தாரக சீனிவாசலு கடிதம் எழுதியுள்ளார். கோவிலின் மாண்பு(சிறப்பு) மேம்படவும், நகரம் செழிக்கவும் அனைத்துத் தரப்பினரும் தத்தமது வரம்புகளுக்குள் ஆக்கப்பூர்வமாக பங்களிக்குமாறு அறங்காவலர் குழு தலைவர் வேண்டுகோள் விடுத்தார். கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் முதல் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலுக்குள் செல்போன் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சிலர் செல்போன் எடுத்துச் செல்கின்றனர். ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானத் தலைவர் அஞ்சுரு சீனிவாசலு கடிதம் எழுதியுள்ளார். செல்போன் தடை. கோவிலின் புனிதம் காக்கவும், ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரம் செழிப்பாக இருக்கவும், மூலவிராட்டை (மூலவரை)தொலைபேசியில் படமாக்கக் கூடாது, நமது கோவிலின் புனிதத்தை காக்க, அந்தந்த அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் செல்போன்களை தடை செய்வதில் ஒத்துழைக்க வேண்டிம் என்றும் தேவஸ்தானம் எடுத்த முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்து அவரவர், தங்கள் பகுதியில் உள்ள தலைவர்களிடம்,நிர்வாகிகளிடம் தொழிலாளர்களிடம் கூறி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார். கோவில் பூசாரிகள், பணியாளர்கள் யாரேனும் செல்போன் கொண்டு சென்றால், 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சூரு.தாரக.சீனிவாசலு எச்சரித்தார்.