செஞ்சியில் வள்ளலார் கோவில் 9ம் ஆண்டு கும்பாபிஷேக தின விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2023 05:04
செஞ்சி: செஞ்சி வள்ளலார் கோவிலில் கும்பாபிஷேக தின விழா நடந்தது.
செஞ்சி முல்லை நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு ஜோதி வழிபாடு, அகவல் வழிபாடு, சன்மார்க்க கொடியேற்றம் நடந்தது. 9 மணிக்கு நடுப்பட்டு புருஷோத்தமன் வில்லுப்பாட்டு குழு மற்றும் கணக்கன்குப்பம் முத்துகார்த்திகேயன் வள்ளலார் குழுவினர் சார்பில் வள்ளலார் வீதி உலா நடந்தது. தொடர்ந்து வள்ளலாளர் சொற்பொழிவு மற்றும் செஞ்சி ஸ்ரீசத்தியசாயி சேவா சமிதியினரின் சர்வ மத பஜனை, ஆலம்பூண்டி வள்ளலார் கொள்கை நெறி பரப்பு இயக்கம் சார்பில் வில்லுபாட்டு நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தை பேரூராட்சி சேர்மன் மொக்தியார் மஸ்தான் துவக்கி வைத்தார். இதில் பழங்குடியினருக்கு வேட்டி, சேலைகள் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அருட்பெருஞ்ஜோதி மன்றம், செஞ்சி வட்ட சன்மார்க்க சங்கம், முல்லை நகர் பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.