கூடலூர்: நடு கூடலூர் அருள்மிகு விநாயகர் மற்றும் மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா, 7ம் தேதி, காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகள நடந்தது. 11, 13, 15ம் தேதிகளில் இரவு, கும்ப ஊர்வலம் நடந்தது. நேற்று, முந்தினம் இரவு 7:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம், கூடலூர் விநாயகர் கோவில், மைசூரு சாலை முனீஸ்வரன் கோவில், தேவர்சோலை சாலை எஸ்.எஸ். நகர் அருள்மிகு சத்திய நாகராஜ் கோவில் சென்று கூடலூர் வழியாக கோவிலை வந்து அடைந்தது. நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 6:00 மஞ்சள் நீராடி அம்மன் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.