Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
27ல் சாய்ராம் கோவிலில் கும்பாபிஷேகம் ஆஞ்சநேயர் கோவில் நிலத்தை ஆட்டையை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பகவதி அம்மன் கோயில் சித்திரை திருவிழா : திரளாக பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகவதியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தி கரகம் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.

உத்தமபாளையம் வடக்குத் தெருவில் வரலாற்று சிறப்பு மிக்க பகவதியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் விழா துவங்கி சித்திரையில் சக்தி கரகம் எடுப்பது மேற்கொள்ளப்படும். பிற கோயில்களில் சக்தி கரகம் எடுத்தாலும், இது சற்று விசேசமானது. அதீத சக்தி கொண்டது. இசையமைப்பாளர் இளையராசா தனது பாடல் ஒன்றில் " ஊர் மெச்சும் உத்தமபாளையம் கரகம்" என்று இந்த கோயில் கரகத்தை சுட்டிக்காட்டி பாடியிருப்பார்.  கடந்த ஏப்ரல். 11 ல் இருந்து தினமும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். ஏப்.18 ல் காளாத்தீஸ்வரர் கோயில் முன்பாக முல்லைப்பெரியாற்றில் நள்ளிரவு 12 மணியளவில் சக்தி கரகம் எடுக்கப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. விடிய விடிய ஆயிரக்கணக்கில் பெண்கள் காத்திருந்து சக்தி கரகத்தை தரிசித்தனர். முன்னதாக அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல நேர்த்திகடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சக்தி கரகம் கோயிலில் இருந்து கிளம்பி நகர்வலம் வந்தது. எட்டு இடங்களில் காவு கொடுக்கும் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 2 மணியளவில் சக்தி கரகம் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது , முன்னதாக நூற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar