திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூர் கிராமத்தில், 500 ஆண்டுக்கு முந்தைய பழமையான அனுமந்தராயர் கோவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முற்புதர்களுக்குள் மறைந்திருந்த இக்கோவில், மற்றும் சில கல்தூண்கள், சிலைகள் உள்ளிட்டவை அறநிலையத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் வெளிக்கொண்டு வரப்பட்டன. இக்கோவிலுக்கு சொந்தமாக, 50 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றை ஆக்கிரமிப்பில் வைத்துள்ள சிலர், கோவில் கண்டுபிடிக்கப்பட்டால் எங்கு நிலங்கள் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்துடன் ஆஞ்சநேயர் கோவில் நிலத்தை ஆட்டையை போட முயன்று வருகின்றனர். இதன் காரணமாகவே, பல ஆண்டுகளாக கோவிலை மூடி மறைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தொல்லியல் துறை மற்றும் அறநிலைய துறையின் ஆய்வுக்கு உட்படுத்தி,. அனுமந்தராயர் கோவில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.