Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : குருப்பெயர்ச்சி பலன் ... கன்னி : குருப்பெயர்ச்சி பலன் .. திறமை வெளிப்படும் கன்னி : குருப்பெயர்ச்சி பலன் .. திறமை ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை)
சிம்மம் : குருப்பெயர்ச்சி பலன் .. அள்ளித் தருவார் குருபகவான்
எழுத்தின் அளவு:
சிம்மம் : குருப்பெயர்ச்சி பலன் .. அள்ளித் தருவார் குருபகவான்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
01:04

மகம்: ஒன்பதில் குருபகவான்

குரு பகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு 11:27 மணிக்கு உங்களின் பத்தொன்பதாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் - கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு அனைத்து துறைகளிலும் திறமை மிகுந்திருக்கும். மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். எதையும் பலமுறை யோசித்து செய்து வெற்றி பெறும் உங்களுக்கு குருபகவான் இந்த ஆண்டு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  ‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு’’ என்பார்கள். இங்கு குருஇருக்கும் காலத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். ஒரு மனிதன் தவறே செய்திருந்தாலும் அதற்கான தண்டனையயை குருபகவான் இப்போது வழங்க மாட்டார். மனதில் தைரியம் மேலோங்கும். புதிய முடிவுகளை எடுக்கும் விதத்தில் துணிச்சல் உண்டாகும்.  மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். உணவுக்கட்டுப்பாட்டில் கவனம் தேவை. வெளியிடங்களில் உண்பதை தவிர்க்கவும்.
சனி சப்தம ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று பின்பற்றுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த பணிச்சுமை குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு வந்து சேரும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அதனால் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் நன்மையை எதிர்பார்க்கலாம். பெற்றோரின் அன்பும் ஆசியும் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும். புத்திகாரகன் புதனால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்க வாய்ப்புண்டு.
பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன்தரும். தேவைகள் நிறைவேறும் விதத்தில் வருமானம் உயரும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனப் பயணத்தின் போதும்,  வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் விழிப்புடன் செயல்படுவது நல்லது. முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். புதியவர்களிடம் நிதானமாக செயல்படுவது நல்லது.
அரசியல்துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியைக் காண்பர். எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வீண் செலவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணப்பற்றாக்குறை குறையும். பேச்சில் கடுமையைக் காட்டாமல் இருப்பது நலம் தரும். தலைமை, மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து பழகுவது நல்லது.
பெண்களுக்கு சுபவிஷயத்தில் ஏற்பட்ட தடை, பிரச்னை மறையும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பணிச்சுமைக்கு ஆளானாலும் அதற்குரிய பணபலன் கிடைக்கும். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். திருமணமான பெண்கள் புகுந்த வீட்டினரினர
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற அன்றாடம் கூடுதல் நேரம் படிப்பது நல்லது. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்கால கல்வி குறித்த கவலைகள் இப்போதைக்கு சி்ந்திக்க வேண்டாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அவர்களுடன் இன்பச் சுற்றுலா சென்று திரும்புவீர்கள்.
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி மன அமைதி உண்டாகும். சுபவிஷயங்கள் தடையின்றி நிறைவேறும்.


பூரம்: அள்ளித் தருவார் குருபகவான்

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினெட்டாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் - சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பணம் வருவதில் சிரமம் எதுவும் இருக்காது.
தன் கருத்துக்களால் மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் உங்களுக்கு இந்த பெயர்ச்சியில் குருவின் மாற்றம் பலவகையான நன்மைகளை அள்ளித் தரப்போகிறார். உங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். உயர்வுக்கேற்ப வாழ்வில் உயர்வைக் காண்பீர்கள். சேமிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். ஆடம்பர வசதிகளுக்குக் குறைவிருக்காது. வசதியான கார், வீடு வாங்க வாய்ப்புண்டாகும்.
தொழில் வியபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். பங்குதாரர்களிடையே ஒற்றுமை மேம்படும். சிலர் தொழில் விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆகஸ்ட் மாதம் வரை அலைச்சல், வெளியூர் பயணங்களை தவிர்க்க முடியாது. அதன்பிறகு நீங்கள் பாடுபட்டதற்கான பலன் கிடைக்கப் பெறுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பணிச்சுமை, பிரச்னைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணங்கள் அடிக்கடி செல்ல வேண்டி இருக்கலாம். ஆனால் 2023 ஆக.24க்குப் பின் அலுவலகத்தில் பிரச்னைகள் ஏற்படலாம். நிர்வாகத்தினரின் ஆதரவு குறையும். நிர்வாகத்தினருடன் மோதல் போக்கு, கருத்து வேறுபாடு ஏற்படலாம். சக ஊழியர்களின் மறைமுகப் பேச்சால் வருத்தம் உண்டாகலாம். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. 2023 அக். 10க்குப் பிறகு ராகு எட்டாம் இடத்திற்கு வருவதால் முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். யாரிடமும் அளவுக்கு மீற பழக வேண்டாம்.
குடும்பத்தில் வருமானம் திருப்தியளிக்கும். பாக்கிய ஸ்தான குருவால் பலவழிகளிலும் பணம் கைக்கு வரும். இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும்.  கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபவிரயச் செலவுகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் அனுகூலமான காலகட்டமாக அமையும். ராகு பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமராகுவால் உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மாதவிடாய்க்கோளாறுகளால் பணிகள் பாதிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு ஆறுதலையும், நிம்மதியையும் அளிக்கும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு நிர்வாகத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சி மேற்கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளால் மனதில் உற்சாகம் உண்டாகும்.

கலைத்துறையினர் எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள முயல்வர். புதிய முயற்சிகளில் ஓரளவு நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.  எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஆடம்பர, வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்க நேரிடும். சாதுர்யமான பேச்சால் வெற்றி கிடைக்கும்.
அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். தலைமையின் ஆதரவால் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். தொண்டர்களின் மத்தியில் கவுரவம் உயரும். வழக்குகளில் முடிவு சாதகமாக அமையும். ராகு பெயர்ச்சிக்குப் பின் கூட்டணி கட்சிகளில் இருந்து விலகும் அளவுக்கு மனம் வருத்தப்படும். தொலைதுாரங்களுக்கு பயணங்கள் செல்ல நேரலாம். பணவரவு திருப்தியளிக்கும். ஆனால் அதற்கு  கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர்.  
பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு வெண் மொச்சை சுண்டல் நைவேத்யம் செய்ய நன்மை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.


உத்திரம்: குருபார்வையால் நன்மை

குருபகவான் ஏப்.22, 2023 இரவு 11:27 மணிக்கு உங்களின் பதினேழாவது நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கு மாறுகிறார்.
சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடிப்பவர்கள். திட்டமிடுவதில் கெட்டிக்காரர்களான உங்களுக்கு குருபகவான் நட்புக் கிரகமாவார். ஒன்றாம் பாதத்திற்கு ஒன்பதாமிடத்திற்கும், மற்ற மூன்று பாதத்திற்கு மறைவு ஸ்தானத்திற்கும் மாறுகிறார். ராகு, சூரியன் இரு கிரகங்களால் ஏற்படும் தோஷத்தை குருவின் சேர்க்கையால் பெருமளவு குறையும். குரு பார்க்க கோடி நன்மை என்பது பெரியவர்களின் அனுபவ வாக்கு. உடல்நலன் சிறப்பாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் செலவைக் கட்டுப்படுத்துவீர்கள். மனதில் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திருத்தலங்களை தரிசனம் செய்வீர்கள். மகான்களில் ஆசி கிடைக்கும்.  கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும்.
பணியாளர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
குடும்பத்தில் வருமானம் திருப்தியளிக்கும். உத்திரம் முதல் பாதத்திற்கு பாக்கிய ஸ்தான குருவால் பலவழிகளிலும் பணம் கைக்கு வரும். இருந்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உதவி கிடைக்கும். சுபவிரயச் செலவுகள் அதிகரிக்கும்.  உத்திர நட்சத்திரத்தின் மற்ற பாதங்களுக்கு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மறையும். களத்திர ஸ்தானத்திற்கு ராகு மாறுவதால் மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். மனைவி, குழந்தைகளின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை தவிர்ப்பது அவசியம். யோசித்து மென்மையான நல்ல வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துவது அவசியம்.
பெண்கள் சாதுர்யமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்னைகளையும் தீர்த்து விடுவர். வெளியூர் பயணங்கள் அடிக்கடி செல்ல நேரிடும். .
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதுர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வருவர். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவர்.  விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதிபதி புதன் ராகுவுக்கு கேந்திரம் பெறுவதால் மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வர். கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
பரிகாரம்: ரங்கநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (1.5.2024 முதல் 10.5.2025 வரை) »
temple news
அசுவினி: வருமானம் அதிகரிக்கும்செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ராசிக்குள் சஞ்சரித்த குரு ... மேலும்
 
temple news
கார்த்திகை: நண்பரால் நன்மைஆத்ம காரகனான சூரியனை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்: சோதனையும் சாதனையாகும்செவ்வாயை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: பிரிந்த தம்பதி சேர்வர்குருவை நட்சத்திராதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதத்தில் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேதுவை நட்சத்திராதிபதியாகவும், சூரியனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar