வேதாரண்யம்: வேதாரண்யம் சர்வகட்டளை, வ.உ.சி., நகர் ஆகிய இடங்களில், புரட்டாசி முதல் சனி கிழமையை முன்னிட்டு, வெங்கடாஜலபதிக்கு சிறப்பு கம்பசேவை பூஜை நடந்தது. ஓவியமாக வரையபட்ட வெங்கடாஜலபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.தோப்புத்துறையில், அபிஷேஷ்ட வரதராஜபெருமாள் கோவிலில், சிறப்பு அபிஷக, ஆராதனை நடந்தது. கள்ளிமேடு, கோவில்பத்து, நாகக்குடையான ஆகிய இடங்களில் உள்ள பெருமாள் கோவிலில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர்.