திண்டிவனம் பகுதி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2012 10:09
திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.சிங்கனூர் லக்ஷ்மி நாராயணன் பத்மாவதி சமேத சீனுவாசபெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு பெருமாள் தங்க கவசத்தில் திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். பத்மாவதி தாயாரும், ஆண்டாள் நாச்சியாரும் சிறப்பு அலங்காரத்தில் உடன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தீவனூர் ஆதிநாராயணப்பெருமாள் என்கிற லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மஹா அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. மாலையில் உற்சவர் நாகவாகனத்தில் பள்ளிக்கொண்ட அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் மற்றும் நல்லியக்கோடன் நகர் அலர்மேல்மங்கை சமேத சீனுவாச பெருமாள் கோவில்களில், பெருமாள் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.