பரமக்குடி வண்டியூர் பெருமாள், கருப்பண்ணசாமி கோயில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 06:04
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த வண்டியூர் பெருமாள் கோயில், கருப்பணசாமி கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
பரமக்குடி சவுராஷ்ட்ரா பிராமண மகாஜனர்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி, நாகர்மேடு பாலஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக் கோயில்களில் நூதன விமானங்கள் கட்டப்பட்டு அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 27 வது நாள் அன்று மண்டலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 8:30 மணி முதல் அனுக்கை, மூல மந்திர ஜப ஹோமங்கள் நடந்தன. பின்னர் மகாபூர்ணாகுதி நிறைவடைந்து கடம் புறப்பாடாகியது. கடங்கள் கோயிலை சுற்றி வந்த நிலையில், ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், கருப்பணசாமி, சுந்தர பாலா ஆஞ்சநேயர் கும்ப திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் டிரஸ்டிகள் செய்திருந்தனர்.