பெரியகுளம்: பெரியகுளத்தில் கோயில்களில் குருப் பெயர்ச்சி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் ஞானாம்பிகா சமேத காளகஸ்தீஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் இரவு 11: 27 மணிக்கு குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு முன்னதாக இரவு 9:30 மணி அளவில் பரிகார ஹோமமும் அதனை தொடர்ந்து நவக்கிரக அபிஷேகம் ஆராதனை நடந்தது பரிகார ராசிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் நலம் பெறும் ராசிகள் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
* கம்பம் ரோடு காளியம்மன் கோயில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் குருப்பெயர்ச்சி நடந்தது. கோயில்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான பக்தர்கள் குருவிற்கு உகந்த மஞ்சள் நிறஆடை மற்றும் சேலைகள் அணிந்து குரு பகவானை தரிசனம் செய்தனர்.