Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் தகவல் பலகை இல்லை : பக்தர்கள் குழப்பம் ராமேஸ்வரம் கோயிலில் தகவல் பலகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா மாரியம்மன் பூச்சாட்டு விழா ; பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம்
எழுத்தின் அளவு:
மகா மாரியம்மன் பூச்சாட்டு விழா ; பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2023
03:04

அவிநாசி: அவிநாசி கைகாட்டிப்புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டோர் மாவிளக்கு எடுத்து ஊர்வலம் சென்றனர்.

அவிநாசி,கைகாட்டி புதூரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழாவில்,நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன் பிறகு மாலையில்,கோவில் வளாகத்தில் 50ம் மேற்பட்ட பெண்கள் கும்மியடித்தனர். அதனைத் தொடர்ந்து,மகா மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை,பொங்கல் வைத்தல்,கம்பம் பிடுங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக,கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல்,23ம் தேதி கம்பம் நடுதலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. அதன் பின்னர் 25ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல்,கரகம் எடுத்தல்,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று,மஞ்சள் நீராட்டுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பூச்சாட்டு விழா நிறைவு பெறுகின்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவையொட்டி, ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் வழிபாடு மன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar