உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவி லில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரமோற்சவம் கடந்த 17ம் தேதி துவங்கியது. அன்று ரோஹணம் திருப்பல்லக்கும், பகல் 12 மணிக்கு சிறப்பு திருமஞ்சன ததியாராதனமும், இரவு சுவாமிவீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நேற்று முன்தினம் (23ம் தேதி) காலை 11 மணிக்கு சூர்ணேசத்வசம் சர்வ பூபால விமானம் சிறப்பு திருமஞ்சனமும், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 11 மணிக்கு திருப்பல்லக்கு பெருமாள் வெண்ணை தாழிசேவை சிறப்பு திருமஞ்சனம் ததியாராதனம், இரவு வேடுபரி குதிரை வாகன உற்சவம் நடந்தது.