பதிவு செய்த நாள்
27
ஏப்
2023
10:04
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோளான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் ஸ்ரீரங்கம் சுவாமிகள் பங்கேற்று பாரம்பரிய சாஸ்திர முறைப்படி பூமி பூஜை செய்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் ஸ்ரீகாளஹஸ்தியில் சுமார் 700 ஆண்டுகால வரலாறு கொண்ட பழம்பெரும் புராதன வைணவ கோவிலான ஸ்ரீ பிரசன்ன வரதராஜ சுவாமி கோயில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பூமி பூஜை மஹோத்ஸவ நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் பீமாவரம் தலைவர் ஸ்ரீ ராமச்சந்திர நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலு தலைமையில், கோவில் புனரமைப்பு பணியின் பூமி பூஜை மஹோத்ஸவம் சிவன் கோயில் வேத பண்டிதர்கள் தலைமையில், கோவில் அர்ச்சகர்களால் துவக்கப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ பிரசன்ன வரதராஜு சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து புதிய கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டது.
அதன்பின், கோவிந்த நாமங்கள் முழங்க பக்தர்களால் வைதீக முறைப்படி பூர்ணாஹுதி நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பக்தர்களிடம் உரையாற்றிய ஸ்ரீரங்கம் சுவாமிஜி ராமச்சந்திர நாயர், ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நிலையில் சோர்வுக்கு(ஆயுட் காலம்) வந்து விடுவதாக கூறினார். தற்போது, இந்த பழமையான கோவிலின் புனரமைப்பு மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. தற்போது சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரகா தலைமையில் இந்த கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது என்றும் கடவுள் யாரோ ஒருவர் மூலம் ஒவ்வொரு பணியை நிர்ணயிப்பார் என்றும், சீனிவாசுலுக்கு சங்கல்ப பாக்யம், வரம் , கடவுள் அருளுவதாகவும், இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் கடவுள் அருள் (கைங்கர்யம் )கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஞ்சூரு. சீனிவாசுலு பேசுகையில் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தன்னுடைய அதிர்ஷ்டமாக கருதுவதாகவும் புதிய வரதராஜ பெருமாள் கோயில் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கப்பட்டு கோயில் மகா கும்பாபிஷேகம் மற்றும் ( சிலை) விக்கிரக பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடக்க ( உள்ளூர் )பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பதி எம் எல் சி டாக்டர்.சிப்பாய். சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசுகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் தான் பெரும் பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்தார் மேலும் இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி ஆர்டிஓ இராமராவ் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள் லோகேஷ் பாபு ,முரளிதர், சீனிவாசன், சுப்பா ரெட்டி, கிஷோர் குமார் மற்றும் சூரிய பிரசாத் ஸ்தபத்தி குமார் மற்றும் கோயில் அதிகாரி லட்சுமய்யா உட்பட கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.