கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 05:04
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. கடந்த 18ம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சாகை வார்த்தல் விழாவுடன் துவங்கியது. இன்று விராடபர்வம், வெள்ளிக்கால் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நாளை கிருஷ்ணன் தூது, இரவு சுவாமி புறப்பாடும், 30ம் தேதி காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடக்கிறது. 1ம் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4ம் தேதி விடையாத்தி, 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.