பச்சை பட்டு உடுத்தி தங்க நிற குதிரையில் ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ண பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 05:04
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் பாலகிருஷ்ண பெருமாள் பச்சை பட்டு உடுத்தி திருமால் அழகர் வேடமிட்டு வைகை ஆற்றில் பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்தின் இடையே எழுந்தருளினார்.
திருப்புவனம் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் 125 வது ஆண்டு சித்திரை பெருவிழா நேற்று 27ம் தேதி காலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இரவு முத்துப்பல்லக்கில் பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றில் இறங்க புறப்பட்டார். இன்று காலை நான்கு மாட வீதிகளையும் தங்கநிற குதிரை வாகனத்தில் வலம் வந்த பாலகிருஷ்ண பெருமாள் புஷ்பவனேஸ்வரர் கோயில் வழியாக காலை 8:30 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோஷத்தின் இடையே வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். பின் பல்வேறு மண்டகப்படிகளில் திருமால் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வீரபத்ரசாமி கோயிலில் இருந்து பூப்பல்லக்கில் ஊர்வலமும், 30ம் தேதி உற்சவசாந்தி பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்புவனம் நகர் பொதுமக்களும், யாதவர் பண்பாட்டு கழகமும் செய்திருந்தனர். பாலகிருஷ்ணபெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் போது மழை பெய்வது வழக்கம், இந்தாண்டும் இன்று மதியம் சிறிது நேரம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.