அன்னூர்: அன்னூர் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
அன்னூர் மாரியம்மன் கோவிலில், 33ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 18ம் தேதி விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தது. அதன் பிறகு 30ம் தேதி வரை, தினமும் மதியம் அபிஷேக பூஜையும், இரவு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. நேற்று இரவு, அன்னூர் பாத விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் அணிக் கூடை எடுத்து கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலையில் சக்தி கரகம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு நடந்தது. காலை 10:00 மணிக்கு சுவாமி மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. காலை 11:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கி மதியம் 1:15 மணிக்கு நிறைவடைந்தது. அன்னூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அம்மன் திருவீதி உலா, ஜமாப் இசை மற்றும் வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளில் வழியாக நடந்தது.