திருப்பதியில் வைகுண்ட துவாதசி; சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2025 10:12
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
திருமலையில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று ஏழுமலையான் கருவறையின் வெளிசுற்று பிரகாரத்தில் உள்ள வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். வைகுண்ட ஏகாதசியான நேற்று அதிகாலை 1.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 67 ஆயிரத்து 53 பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக ரூ.2.25 கோடி செலுத்தினர். இன்று வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.