பேரையூர்: பேரையூர் அருகே அத்திபட்டி புது மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 4 நாட்கள் நடப்பது வழக்கம். இந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி துவங்கிய திருவிழா நேற்று வரை நடந்தது. வாகன அலங்காரத்தில் அம்மன் முக்கிய வீதிகளில் பவனி வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம் பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.