பதிவு செய்த நாள்
02
மே
2023
05:05
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை நிர்வகிக்கின்றன. வைணவ 108 திவ்ய தேசங்களில், 62ம் கோவிலான இங்கு, ஆதிவராக பெருமாள் மூலவர், அகிலவல்லி தாயார், ரங்கநாதர் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். இக்கோவில், திருமண தடை, ராகு - கேது தோஷ நிவர்த்தி பரிகார சிறப்பு பெற்றது. இங்கு, ஆண்டுதோறும் முக்கிய உற்சவமாக, சித்திரை பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடத்தப்படுகிறது. தற்போது, நாளை மாலை, அங்குரார்ப்பணம் மற்றும் மறுநாள் காலை கொடியேற்றத்துடன், இவ்விழா துவக்கப்படுகிறது. மே 13ம் தேதி வரை, தினமும் உற்சவங்கள் நடக்கின்றன. விழாவின் முக்கிய உற்சவங்களாக, 8ம் தேதி இரவு கருடசேவை; 10ம் தேதி காலை திருத்தேர்; 13ம் தேதி இரவு தெப்போற்சவம் உள்ளிட்டவை நடக்கின்றன.