பதிவு செய்த நாள்
02
மே
2023
05:05
பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும்.
பழநி, மலைகோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.26-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனங்களில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. (மே.,2) இன்று இரவு 7:30 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அதன்பின் சேஷ வாகனத்தில் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மே.4ல் காலை 7:35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.,5 வரை பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. பத்து நாட்கள் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மே.4.,ல் பெரியநாயகிஅம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருளுவார். மே.5.,ல் பெரியநாயகி அம்மன் கோவில் இருந்து 108 பால்குடங்கள், திருஆவினன்குடி கோயிலுக்கு எடுத்து வரப்படும். குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு வெள்ளிரதத்தில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருஉலா நடைபெறும்.