கோவை: சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சக்தி விநாயகர். அருள் சித்தி விநாயகர், அருள் தரும் ஜெயமாரியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் நிகழ்வாக கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது .அதை தொடர்ந்து அம்மன்தங்கக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.