சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சங்கரபாண்டியபுரம் பூமாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பூக்குழி நிகழ்ச்சி அதிகாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு கடந்த 21ல் கொடியேற்றத்துடன் பொங்கல் திருவிழா தொடங்கியது. 11 நாட்களாக நடைபெற்ற விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடந்தது. ரிஷப, பூப்பல்லுக்கு, குடை, தண்டியல் சப்பரங்களில் அம்மன் வீதி உலா மற்றும் வில்லிசை, ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி நேற்று அதிகாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பூச்சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.