பதிவு செய்த நாள்
03
மே
2023
06:05
சூலூர்: சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் நடந்த திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
முத்துக்கவுண்டன் புதூர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா, கடந்த, 18 ம்தேதி துவங்கியது. 25 ம்தேதி கம்பம் நடப்பட்டு பகத்ர்கள் தினமும் ஆடினர். இன்று அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வந்தனர். சிறப்பு அபிஷேகத்துக்கு பின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ராவத்தூர் மாகாளியம்மன் கோவில், 18 ம்தேதி நோன்பு சாட்டப்பட்டது. நேற்று கரகம் எடுத்தலும், அம்மை அழைத்தலும் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாவிளக்கு, முளைப்பாரிகை எடுத்து வந்த பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். கே.ராயர்பாளையம் பிளாக் மாரியம்மன் கோவில், கடந்த, 25 ந்தேதி சாட்டப்பட்டது. நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது. திருவிழாக்களில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் திருவீதி உலா நடக்க உள்ளது.