குன்னூர் ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் 67வது ஆண்டு பூகுண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2023 08:05
குன்னூர்: பாலகொலா ஊராட்சியில், 67ம் ஆண்டு பூ குண்டம் திருவிழா விமர்சையாக நடந்தது.
நீலகிரி மாவட்டம் பாலகொலா ஊராட்சியில், அரசு சின்கோனா தோட்டத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் நேற்று பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. 48 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் இன்னிசை கச்சேரி நடந்தன. விழாவில் கும்பம் வானவேடிக்கை உள்ளிட்டவை நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று காலை 9.00 மணி முதல் அம்மன் திருத்தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, மாவிளக்கு பூஜை, அன்னதானம் ஆகியவை நடக்கின்றன. விழாவின் ஏற்பாடுகளை சுற்றுப்புற 9 கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.