திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2023 11:05
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஆறாம் நாளான நேற்று காலை முதல் சூர்ணாபிஷேகம், ஆனந்த விமானப் புறப்பாடும், இரவு, யானை வாகன புறப்பாடும் நடந்தது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருள தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.