பழநி கோயிலில் அன்னதான இலையில் உரம் தயாரிக்க திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2023 04:05
பழநி:பழநி, மலைக்கோயிலில் அன்னதானத் திட்டத்தில் பயன்படுத்திய இலைகளை உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பழநி மலைக்கோயிலில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 8:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் வாழை இலைகளை உரமாக மாற்ற கோயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதற்கென ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன மறுசுழற்சி இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் அன்னதான இலைகள், வீணான காய்கறி கழிவுகள் ஆகியவற்றை இந்த இயந்திரத்தில் கூலாக மாற்றி, ராட்சத குழாய்கள் மூலம் அடிவாரம் பகுதியில் உரத்தொட்டி அமைத்து இயற்கை உரமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதனை விரைந்து செயல்படுத்த கோரிக்கை எழந்துள்ளது.