தேவகோட்டை: தேவகோட்டை அண்ணாநகர் ஜீவா நகர் மத்தியில் உள்ள கல்லாம்பிரம்பு காளியம்மன் முனீஸ்வரர் கோவில் சித்திரை உற்சவ விழா மே. 2 செவ்வாய்க்கி கணபதி ஹோமம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் காளியம்மன் , முனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று முன்தினம் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பறவைகாவடி , வேல் காவடி, பால்குடம் எடுத்து, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமியை வழிப்பட்டனர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.