பதிவு செய்த நாள்
11
மே
2023
03:05
பல்லடம்: பல்லடம் அருகே மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்தது.
பல்லடத்தை அடுத்த, கவுண்டம்பாளையம் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, மே 3ம் தேதி பூச்சாட்டு விழா துவங்கியது. தொடர்ந்து, பொட்டுச்சாமி பொங்கல், கம்பம் நடுதல், அம்மை அழைத்தல், கம்பம் பூவோடு எடுத்தல், மாவிளக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. நேற்று முன்தினம், செல்ல முருகன் கலைக்குழுவின் கும்மியாட்டம் நடந்தது. நேற்று காலை, 6.00 மணிக்கு பொங்கல் விழாவும் இதையடுத்து, பூவோடு எடுத்தல் நிகழ்வும் நடந்தது. இரவு, 8.00 மணிக்கு நிமிர்வு கலைக்குழுவின் பறையாட்ட நிகழ்ச்சியும், அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மாகாளியம்மன் அருள்பாலித்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழா குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.