சேந்தநாடு திரௌபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 03:05
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி கடந்த 4ம் தேதி மாலை 5.30 மணியளவில் பகாசுரனுக்கு அன்னமிடுதல் நிகழ்ச்சி நடந்தது. 5ம் தேதி காலை 7 மணியளவில் சுவாமிக்கு திருக்கல்யாணமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. அதனைத் தொடர்ந்து தினசரி இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. இன்று கலை 9 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி வழிபட்டனர். இந்த தோரோட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., மோகன்ராஜ், தாசில்தார் ராஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., மகேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.