பதிவு செய்த நாள்
11
மே
2023
03:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அமைதிநகரில், மதுரைவீரன் சுவாமி, பொம்மியம்மன், வெள்ளையம்மன், பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழாவில், இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
பொள்ளாச்சி, ஜோதிநகர் அமைதிநகர், மதுரைவீரன் சுவாமி, பொம்மியம்மன், வெள்ளையம்மன், பட்டத்தரசியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 7ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தீர்த்தம் கொண்டு வருதல், உருவாரம் கொண்டு வருதல், கும்பம் தாளித்தல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இன்று (10ம் தேதி) காலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், காலை, 9:30 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. நாளை (11ம் தேதி) அமுது பொங்கல் தீபாராதனையும், வரும், 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா;13ம் தேதி அபிேஷக ஆராதனை பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.