காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் கோ பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2023 05:05
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம், ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு கோ" பாதுகாப்பு அறக்கட்டளைக்கு நன்கொடையாக - ரூபாய் 5,87,295/- (காசோலை) நன்கொடையாக - ஸ்ரீ சோமு ஆனந்தப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கினர். இவர்கள், புலிச்செர்ல மண்டலம், சித்தூர் மாவட்டம், மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த வர்கள் . முன்னதாக சோமநாதப்பிள்ளை குடும்பத்தினருக்கு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். தேவஸ்தான செயல் அலுவலர் வெங்கடேஷ் தொடர்ந்து சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கோயில், கண்காணிப்பாளர் கோதண்டபாணி, கோயில் ஆய்வாளர் பாலாஜி நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.