பாதயாத்திரை துவங்கிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2023 09:05
மயிலாடுதுறை : சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக பாதயாத்திரை துவங்கிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு, ஏராளமான பொதுமக்கள் மரியாதை செய்து வரவேற்பு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்துக்கு சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் ஆலய திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை நடைபெறுகின்றது. இதில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீன 27 வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தருமபுர ஆதீன மடத்திலிருந்து ஆதீன பூஜா மூர்த்தி செந்தமிழ் சொக்கநாதருடன் குரு லிங்க சங்கம பாதயாத்திரையை துவங்கினார். ஒட்டகம் குதிரை ஆகிய முன்னே செல்ல பரிவாரங்களுடன் மேளதாளங்கள் முழங்க பாதயாத்திரையாக சென்ற மடாதிபதிக்கு வீடுகள் தோறும் பூர்ண கும்பம் வைத்து, பாத பூஜை செலுத்தி பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். முன்னதாக ஆலய மடத்தில் செந்தமிழ் சொக்கநாதருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.