பதிவு செய்த நாள்
16
மே
2023
03:05
கோவை; கோவை, வெரைட்டி ஹால் ரோடு, சி.எம்.சி., காலனியில் உள்ள மதுரை வீரன் கோவிலில், 75வது ஆண்டு வைகாசித் திருவிழா, பூச்சாட்டு, கணபதி பூஜையுடன் விழா இன்று துவங்கியது. தொடர்ந்து, மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன், கன்னிமார், முனியப்பன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பூச்சாட்டு நடந்தது. விழாவையொட்டி, திருவிளக்கு பூஜை, மாமுனி பூஜை, அமுது பூஜை, பொங்கல் மாவிளக்கு உட்பட சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. வரும் 23ம் தேதி, கோனியம்மன் கோவிலில் இருந்து, மேள தாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழாவைத் தொடர்ந்து, வரும் 30ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.