திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், உண்டியல் மூலம், 26.94 லட்சம் ரூபாய் வசூலானது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) வீரபத்திரன், கோவில் செயல்அலுவலர் பாலகிருஷ்ணன், காஞ்சிபுரம் உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஆகியோர் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியலில், 26.94 லட்சம் ரூபாயும், 145 கிராம் தங்க நகைகள், 1,750 கிராம் வெள்ளி நகைகளும் இருந்தன.