திருப்பதி: திருப்பதியில் நடைபெற்ற பிரமோற்சவ விழாவில் சுமார் 26.21 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக கோவில்அதிகாரிகள தெரிவித்துள்ளனர். திருமலை திருப்பதில் கடந்த ஒன்பது தினங்களாக பிரமோற்சவ விழா கொண்டாடப்பட்டு வந்தது. விழாவில் ஆந்திரா, தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவ விழா நிறைவு பெற்றதையடுத்து இதற்கான வசூல் ஆன தொகை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 26 கோடியே 21லட்சம் ரூபாய் வசூலானது. இது கடந்தாண்டு நடைபெற்ற பிரமேற்சவ விழா வசூலை காட்டிலும் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.