கீழக்கரை: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் 838ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவையொட்டி, அடிமரம் ஏற்றும் விழா நேற்று நடந்தது. தர்கா நிர்வாக ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன் தலைமையில், செயலாளர் செய்யது பாருக் ஆலிம் அரூஸி,துணை தலைவர் செய்யது சிராஜூதீன் முன்னிலை வகித்தனர்.தர்கா வளாகத்தில் இருந்து முத்தரைய சமுதாயத்தினர், அடிமரத்தை சுமந்து வந்தனர். பின், அடிமரம் பொருத்தப்பட்டது. மாவட்ட காஜி சலாஹூத்தின், உலக மக்களின் நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார். முன்னதாக காலையில், தேவேந்திர குல வேளாளர்கள் தர்கா ரோட்டில், வேம்பிலான தோரண மரங்களை நட்டனர். ஏற்பாடுகளை தர்கா நிர்வாக ஹக்தார், சபை உறுப்பினர்கள் அஸன் இபுராகிம், துல்கருணை பாட்சா, செய்யது மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.