திருவண்ணாமலை: ஆரணி அருகே கமண்டல நாகநதியில் நான்கு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஆரணி அடுத்த சத்திய விஜயநகரம் கிராமத்தில், மன்னர் காலத்து அரண்மனை வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியின் பின்புறம் உள்ள கமண்டல நாக நதிகரையில், நேற்று முன்தினம் 25ம் தேதி நான்கு ஸ்வாமி கற்சிலை இருப்பதாக அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் துரை, வி.ஏ.ஓ. சங்கருக்கு தகவல் தெரிவித்தார்.வி.ஏ.ஓ., சங்கர் மற்றும் தாசில்தார் பாலகிருஷ்ணனும் கமண்டல நாகநதி கரைக்கு சென்று, இரண்டு அடி உயரமுள்ள விசாலாட்சி அம்மன் சிலை, ஒரு அடி உயரமுள்ள காசி விஸ்வநாத சிவலிங்கம், முக்கால் அடி உயரமுள்ள பலிபீடம், ஒரு அடி உயரம் உள்ள நந்தியம் பெருமாள் ஆகிய கற்சிலைகள் கண்டெடுத்தனர். மீட்கப்பட்ட சிலைகள் வருவாய் துறையில் ஒப்படைக்கப்பட்டது.