பதிவு செய்த நாள்
19
மே
2023
05:05
குள்ளஞ்சாவடி : இடங்கொண்டான்பட்டு கன்னியம்மன் கோவில் மகோற்சவ விழா தொடங்கியது. குள்ளஞ்சாவடி அடுத்த, இடங்கொண்டான்பட்டு கிராமத்தில் உள்ள, அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ சபாநாயகர் சமேத, ஸ்ரீ பெரியநாயகியம்மன், ஸ்ரீ கஸ்தூரி அம்மன் ஆலய மகோற்சவ விழா, நேற்று தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை, 7:30-9 மணி வரை, துவஜாரோகணம், மாலை பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதல், இரவு பிடாரி அம்மன் ஊர்வலம் நடந்தது. இரண்டாம் நாளான இன்று, கஸ்தூரி அம்மனுக்கு சாகை வார்த்தல், இரவு வீதி ஊர்வலமும், நாளை மாலை, திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ அக்னிகுமாரத்தி ஊர்வலமும், நாளை மறுநாள் தீ மிதித்தல் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், இடங்கொண்டான்பட்டு கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.