சொற்பொழிவுக்கு கிளம்பிய அறிஞர் ஐன்ஸ்டீனிடம் ‘‘சலவை செய்த உடைகள் இந்த சூட்கேஸில் உள்ளன. நிகழ்ச்சியில் இதை அணிந்து கொண்டு உரையாற்றுங்கள்’’ எனச்சொன்னாள் அவரது மனைவி. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அவரிடம் கொடுத்தனுப்பிய சூட்கேஸில் உள்ள உடைகள் மடிப்பு கலையாமல் அப்படியே இருந்தது. அதைப்பார்த்த மனைவி இதை அணிந்து கொண்டு பேசவில்லையா என கோபமாக கேட்டாள். ‘‘ என்அன்பே ஒரு நிமிடம் யோசித்து பார். அங்கு அனைவரும் என் கருத்தைக் கேட்கத்தான் வந்தார்களே தவிர அணிந்து இருக்கும் உடைகளை பார்த்து ரசிப்பதற்கு அல்ல’’ என்றார். ஆடம்பரம் வேண்டாமே. நாம் நாமாக இருப்போம் என்றார் அறிஞர்.